Tuesday, December 11, 2018

வினோதம்


வாழ்க்கை வினோதமானது ....

அகல் விளக்கின் வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள்..

விடி விளக்கின் வெளிச்சம் காண்பதில்லை ... 


மஹாகவி ...

மஹாகவியே! 

ஒரு கவியாய் புது இலக்கணம் படைத்தாய்!

ஒரு போராளியாய் புரட்சியை விதைத்தாய்! 

ஒரு சமூக ஆர்வலானாய் மக்களின் துயர் துடைத்தாய்!

ஒரு பெண்ணியவாதியாய் பெண்மையை கொண்டாடினாய் !

எம் போன்ற பெண்களின் ஆதர்ச தலைவன் நீ!!! 


ஆனால்... ஒரு பெண்ணாய் யோசிக்கையில்...


உமது பாரியாளின் கண்ணீர் துடைத்ததுண்டோ..

உமது பிள்ளைகளின் பசி ஆற்றியதுண்டோ.. 

உமது பெற்ற கடன் தீர்த்ததுண்டோ.... 

உமது சுற்றம் நட்பு கூடி களித்ததுண்டோ..


வாழ்க்கையின் சாரம்சம் புரிவதற்க்குள் 

முடிவு எழுதபடுகிறது அவன் தலைவனாயினும் சராசரி மனிதனாயினும்....

Monday, November 26, 2018

கடவுள்

கடவுளே எல்லை எனும் ஆத்திகனும்
கடவுளே இல்லை எனும் நாத்திகனும்
ஜாதியே வெறி என்பவனும்
ஜாதியை எறி என்பவனும்
அரசியலே வாழ்க்கை என்பவனும்
வாழ்க்கையே அரசியல் என்பவனும்
பெண்ணியம் எனும் முகமும்
மனிதம் எனும் அகமும்
தற்போது சேரும் ஒரே இடம் - சபரிமலா  !!!!
கடவுளின் விளையாட்டு பாமரனுக்கு புரிவதில்லை
புரிந்தால்
அது கடவுள் இல்லை!!!

Friday, July 13, 2018

அனர்த்தம்

தொலைந்ததின் அர்த்தம் புரிவதற்குள்
கிடைத்தத்தின் அர்த்தம் மறந்து போகிறது!


அரசியல் பரமபதம்


 வாழ்க்கை என்னும் பரமபதத்தில் கடவுளின் பகடைக்காயாய் நான்!
பாம்பின் தலைக்கு தப்பி ...
ஏணியின் பின் ஓடி ....
சக மனிதன் முந்தியால் வருந்தி,பிந்தியால் மகிழ்ந்து,
ஓடி எத்தும்போது,
உச்சியில் தனியாய் நான்.....!!!

ஜல்லிகட்டு ஒரு தமிழச்சியின் பார்வை





பள்ளி பெரியாரும் பாரதியும் அறிமுகம் செய்தது !

கல்லூரி பருவம் பெருமாள் அல்லா ஏசுவினைஅறிமுகம் செய்தது !

பணி உலகத்தினை அறிமுகம் செய்தது !

நான் இன மத ஜாதி மொழிக்கு அப்பாற்பட்டவள் என்று இறுமாதிருந்த வேளை

காளை வந்தது!!

என் மாயை சென்றது!

இத்தனை அழகாய் தமிழ் முழக்கம் கேட்டதில்லை

இத்தனை அமைதியாய் ஆர்பாட்டங்கள் பார்த்ததில்லை

இத்தனை ஆரவாரமாய் ஊர்வலங்கள் சென்றதில்லை

இத்தனை பேரலையாய் மக்கள் சக்தி கண்டதில்லை

இத்தனை அழாகாய் மானுடம் கண்டதில்லை!!!

இனம் மதம் ஜாதி வயது பால் கடந்து ஒரே அடையாளம்!!  த. மி. ழ் !!!!!

தமிழச்சி என்ற அடையாளத்தில் பெருமை கொள்கிறேன்!!!

எங்கே ?







மனிதம் எங்கே??
    குருதி வடியும் முகத்துடன் தன் கரடி பொம்மையை பாதுகாக்க துடிக்கும் சிரியன் குழந்தையை கொல்லும்  மானுடனின் வடிவிலா?

புனிதம் எங்கே??
      பசிக்கு திருடியவனை கொன்று முக நூலில் பதிவேற்றிய நீதி மானின் வடிவிலா??

நேர்மை எங்கே??
       திருடிய கோடிகளின் கணக்கை மின்னஞ்சல்
வாயிலாக சொகுசாய் திருத்தும் சீமானின் வடிவிலா??

பெருமை எங்கே??
       ஒரு நடிகையின் மரணத்தையும் பொழுதுபோக்காய் கடை பரப்பும் ஊடகங்கள் வடிவிலா??

இக்கேள்விகளின் பதில் கடவுள்  எங்கே என்ற கேள்வியின் பதிலின் வடிவிலா??!!