Friday, July 13, 2018

அனர்த்தம்

தொலைந்ததின் அர்த்தம் புரிவதற்குள்
கிடைத்தத்தின் அர்த்தம் மறந்து போகிறது!


அரசியல் பரமபதம்


 வாழ்க்கை என்னும் பரமபதத்தில் கடவுளின் பகடைக்காயாய் நான்!
பாம்பின் தலைக்கு தப்பி ...
ஏணியின் பின் ஓடி ....
சக மனிதன் முந்தியால் வருந்தி,பிந்தியால் மகிழ்ந்து,
ஓடி எத்தும்போது,
உச்சியில் தனியாய் நான்.....!!!

ஜல்லிகட்டு ஒரு தமிழச்சியின் பார்வை





பள்ளி பெரியாரும் பாரதியும் அறிமுகம் செய்தது !

கல்லூரி பருவம் பெருமாள் அல்லா ஏசுவினைஅறிமுகம் செய்தது !

பணி உலகத்தினை அறிமுகம் செய்தது !

நான் இன மத ஜாதி மொழிக்கு அப்பாற்பட்டவள் என்று இறுமாதிருந்த வேளை

காளை வந்தது!!

என் மாயை சென்றது!

இத்தனை அழகாய் தமிழ் முழக்கம் கேட்டதில்லை

இத்தனை அமைதியாய் ஆர்பாட்டங்கள் பார்த்ததில்லை

இத்தனை ஆரவாரமாய் ஊர்வலங்கள் சென்றதில்லை

இத்தனை பேரலையாய் மக்கள் சக்தி கண்டதில்லை

இத்தனை அழாகாய் மானுடம் கண்டதில்லை!!!

இனம் மதம் ஜாதி வயது பால் கடந்து ஒரே அடையாளம்!!  த. மி. ழ் !!!!!

தமிழச்சி என்ற அடையாளத்தில் பெருமை கொள்கிறேன்!!!

எங்கே ?







மனிதம் எங்கே??
    குருதி வடியும் முகத்துடன் தன் கரடி பொம்மையை பாதுகாக்க துடிக்கும் சிரியன் குழந்தையை கொல்லும்  மானுடனின் வடிவிலா?

புனிதம் எங்கே??
      பசிக்கு திருடியவனை கொன்று முக நூலில் பதிவேற்றிய நீதி மானின் வடிவிலா??

நேர்மை எங்கே??
       திருடிய கோடிகளின் கணக்கை மின்னஞ்சல்
வாயிலாக சொகுசாய் திருத்தும் சீமானின் வடிவிலா??

பெருமை எங்கே??
       ஒரு நடிகையின் மரணத்தையும் பொழுதுபோக்காய் கடை பரப்பும் ஊடகங்கள் வடிவிலா??

இக்கேள்விகளின் பதில் கடவுள்  எங்கே என்ற கேள்வியின் பதிலின் வடிவிலா??!!