வாழ்க்கை வினோதமானது ....
அகல் விளக்கின் வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள்..
விடி விளக்கின் வெளிச்சம் காண்பதில்லை ...
வாழ்க்கை வினோதமானது ....
அகல் விளக்கின் வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள்..
விடி விளக்கின் வெளிச்சம் காண்பதில்லை ...
மஹாகவியே!
ஒரு கவியாய் புது இலக்கணம் படைத்தாய்!
ஒரு போராளியாய் புரட்சியை விதைத்தாய்!
ஒரு சமூக ஆர்வலானாய் மக்களின் துயர் துடைத்தாய்!
ஒரு பெண்ணியவாதியாய் பெண்மையை கொண்டாடினாய் !
எம் போன்ற பெண்களின் ஆதர்ச தலைவன் நீ!!!
ஆனால்... ஒரு பெண்ணாய் யோசிக்கையில்...
உமது பாரியாளின் கண்ணீர் துடைத்ததுண்டோ..
உமது பிள்ளைகளின் பசி ஆற்றியதுண்டோ..
உமது பெற்ற கடன் தீர்த்ததுண்டோ....
உமது சுற்றம் நட்பு கூடி களித்ததுண்டோ..
வாழ்க்கையின் சாரம்சம் புரிவதற்க்குள்
முடிவு எழுதபடுகிறது அவன் தலைவனாயினும் சராசரி மனிதனாயினும்....
தொலைக்காட்சியில் உலககோப்பைக்காக போட்டி நடக்கிறது இந்தியா வும் இங்கிலாந்தும்
ஜன்னலின் வெளியே ஒரு எச்சல் இலை சோறுக்காக போட்டி நடக்கிறது சிறுவனும் நாயும்
யாருக்காக பிரார்த்திப்பது சிறுவனுக்கா இந்தியாவுக்கா
குழப்பத்தில் நான் !