Friday, July 13, 2018

எங்கே ?







மனிதம் எங்கே??
    குருதி வடியும் முகத்துடன் தன் கரடி பொம்மையை பாதுகாக்க துடிக்கும் சிரியன் குழந்தையை கொல்லும்  மானுடனின் வடிவிலா?

புனிதம் எங்கே??
      பசிக்கு திருடியவனை கொன்று முக நூலில் பதிவேற்றிய நீதி மானின் வடிவிலா??

நேர்மை எங்கே??
       திருடிய கோடிகளின் கணக்கை மின்னஞ்சல்
வாயிலாக சொகுசாய் திருத்தும் சீமானின் வடிவிலா??

பெருமை எங்கே??
       ஒரு நடிகையின் மரணத்தையும் பொழுதுபோக்காய் கடை பரப்பும் ஊடகங்கள் வடிவிலா??

இக்கேள்விகளின் பதில் கடவுள்  எங்கே என்ற கேள்வியின் பதிலின் வடிவிலா??!!

Wednesday, October 24, 2012

என் தேவதை

பெண்மையின்  பூரணம் நீ வந்ததும்  அடைந்தேன் !
பூமியில் சொர்க்கம் நீ தொட்டதும் அறிந்தேன் !
வாழ்க்கையின் முக்தி நீ சிரித்ததும் அடைந்தேன் !
நரகத்தின் வாசம் நீ அழுகையில் கண்டேன் !
உன் முத்தத்தின் மிச்சம் நிரந்தரம் என்னில் !
உன் நேசத்தின் வாசம் முகிழ்த்ததும் என்னில் !
உன் தழுவலின்  சுகம் விழுந்ததும்  என்னில் !
என் நட்பாய் , என் பகையாய் ,
என் சொர்கமாய்  ,என் நரகமாய்,
என் சேயாய்,என் தாயாய் ,
என் சிரிப்பாய் ,என் அழுகையாய் ,
என் தேவதையாய் ,என் ராட்சசியாய் ,
என் எல்லாம் எல்லாமாய்  இருப்பவளே .. ...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ....



Friday, September 2, 2011

நட்பு


சாலையில் நடந்து போகும் பெண்ணின் பின்னல் ,

வானொலியில் கேட்கும் ஏதோ ஒரு பாடல் ,

கடந்து போகும் சைக்கிள் மணி ஓசை ,

 பயணத்தில் கடக்கும் வீடு ,


 நினைவு அடுக்கில் மறைந்து கிடைக்கும்

தொலைந்து போன தோழியின் நினைவுகளை தட்டி எழுப்புகிறது

நட்பு தொலைந்து போகலாம்


ஆனால் ,
 
 நட்பின் அடையாளங்கள் என்றும் தொலைவதில்லை !!

Wednesday, March 23, 2011

உலககோப்பை

தொலைக்காட்சியில் உலககோப்பைக்காக போட்டி நடக்கிறது  இந்தியா வும் இங்கிலாந்தும்
ஜன்னலின் வெளியே ஒரு எச்சல் இலை சோறுக்காக போட்டி நடக்கிறது சிறுவனும் நாயும்
யாருக்காக பிரார்த்திப்பது  சிறுவனுக்கா இந்தியாவுக்கா
குழப்பத்தில் நான் !

Friday, November 5, 2010

தீபாவளி !!!

தீபாவளி இன்று .....
தம்பி கேட்டான் ஏன் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்தவில்லை என்று
சொன்னால் புரியுமா அவனுக்கு ... !!!
சாட்டையை கண்டால் பிஞ்சு விரல்கள் நியாபகம் வருகிறது ...
புஸ்வானம் கண்டால் புகை சுவாசிக்கும் பிஞ்சு முகம் நியாபகம் வருகிறது ...
மத்தாப்பு கண்டால் கந்தக கரை படிந்த கைகள் நியாபகம் வருகிறது ...

சங்கு சக்கரம் கண்டால் எண்சாண் வயிறுக்காய் கந்தக பூமியில் வேகும் பிஞ்சுகள் நியாபகம் வருகிறது ...
இங்கே  குழந்தைகள்  காசை கரி ஆக்குகிறது ....
அங்கே குழந்தைகள் கரியால் காசு ஆக்குகிறது ..
இங்கே குழந்தைகள் தீப திருநாளில் மாசு காற்றை சுவாசிக்கிறது
அங்கே குழந்தைகள் தீப திருநாளில் மட்டும் தான் நல்ல காற்றை சுவாசிக்கிறது
இறைவா ....என்று தீரும் இந்த சாபம்?

Thursday, July 15, 2010

கனவு உலகம்

ஆரோகியமான உணவு
சுகமான உறக்கம்
பாதுகாப்பான உறைவிடம்
மின் கருவிகளின் சத்தம் இல்லாத அறை
வாகனங்கள் மாசுபடுத்தாத சுற்றுபுறம்
போட்டி பொறாமை இல்லாத உலகம்
மானுடம் சாகாத வாழ்க்கை
அம்மாவின் கருப்பை !

கலப்படம் இல்லா அன்பு
கள்ளம் இல்லா நட்பு
களங்கம்  இல்லா சிரிப்பு
மனதை கொள்ளை கொள்ளும்  குறும்பு
குழந்தை மனது !!!

ஏ  கடவுளே .. வரம் தா .

என் குழந்தைக்கு நான் குழந்தை யாக !!

 

Thursday, May 27, 2010

பாரபக்ஷம்

இறைவா உன் படைப்பில் ஏன் இந்த பாரபக்ஷம் ??
ஆணும் பெண்ணும் சமம் என்று அர்த்தனாரியாக நின்றாய்
ஆனால் உனக்கும் தோன்றவில்லையே
ஆண் குழந்தையை ஆண் சுமக்கவும் பெண் குழந்தையை பெண் சுமக்கவும் ஆணையிட ?
இறைவன் ஆனாலும் ஆண் ஆண்தான் என்று நிருபித்து விட்டாயே ?