Monday, November 26, 2018

கடவுள்

கடவுளே எல்லை எனும் ஆத்திகனும்
கடவுளே இல்லை எனும் நாத்திகனும்
ஜாதியே வெறி என்பவனும்
ஜாதியை எறி என்பவனும்
அரசியலே வாழ்க்கை என்பவனும்
வாழ்க்கையே அரசியல் என்பவனும்
பெண்ணியம் எனும் முகமும்
மனிதம் எனும் அகமும்
தற்போது சேரும் ஒரே இடம் - சபரிமலா  !!!!
கடவுளின் விளையாட்டு பாமரனுக்கு புரிவதில்லை
புரிந்தால்
அது கடவுள் இல்லை!!!

Friday, July 13, 2018

அனர்த்தம்

தொலைந்ததின் அர்த்தம் புரிவதற்குள்
கிடைத்தத்தின் அர்த்தம் மறந்து போகிறது!


அரசியல் பரமபதம்


 வாழ்க்கை என்னும் பரமபதத்தில் கடவுளின் பகடைக்காயாய் நான்!
பாம்பின் தலைக்கு தப்பி ...
ஏணியின் பின் ஓடி ....
சக மனிதன் முந்தியால் வருந்தி,பிந்தியால் மகிழ்ந்து,
ஓடி எத்தும்போது,
உச்சியில் தனியாய் நான்.....!!!

ஜல்லிகட்டு ஒரு தமிழச்சியின் பார்வை





பள்ளி பெரியாரும் பாரதியும் அறிமுகம் செய்தது !

கல்லூரி பருவம் பெருமாள் அல்லா ஏசுவினைஅறிமுகம் செய்தது !

பணி உலகத்தினை அறிமுகம் செய்தது !

நான் இன மத ஜாதி மொழிக்கு அப்பாற்பட்டவள் என்று இறுமாதிருந்த வேளை

காளை வந்தது!!

என் மாயை சென்றது!

இத்தனை அழகாய் தமிழ் முழக்கம் கேட்டதில்லை

இத்தனை அமைதியாய் ஆர்பாட்டங்கள் பார்த்ததில்லை

இத்தனை ஆரவாரமாய் ஊர்வலங்கள் சென்றதில்லை

இத்தனை பேரலையாய் மக்கள் சக்தி கண்டதில்லை

இத்தனை அழாகாய் மானுடம் கண்டதில்லை!!!

இனம் மதம் ஜாதி வயது பால் கடந்து ஒரே அடையாளம்!!  த. மி. ழ் !!!!!

தமிழச்சி என்ற அடையாளத்தில் பெருமை கொள்கிறேன்!!!

எங்கே ?







மனிதம் எங்கே??
    குருதி வடியும் முகத்துடன் தன் கரடி பொம்மையை பாதுகாக்க துடிக்கும் சிரியன் குழந்தையை கொல்லும்  மானுடனின் வடிவிலா?

புனிதம் எங்கே??
      பசிக்கு திருடியவனை கொன்று முக நூலில் பதிவேற்றிய நீதி மானின் வடிவிலா??

நேர்மை எங்கே??
       திருடிய கோடிகளின் கணக்கை மின்னஞ்சல்
வாயிலாக சொகுசாய் திருத்தும் சீமானின் வடிவிலா??

பெருமை எங்கே??
       ஒரு நடிகையின் மரணத்தையும் பொழுதுபோக்காய் கடை பரப்பும் ஊடகங்கள் வடிவிலா??

இக்கேள்விகளின் பதில் கடவுள்  எங்கே என்ற கேள்வியின் பதிலின் வடிவிலா??!!

Wednesday, October 24, 2012

என் தேவதை

பெண்மையின்  பூரணம் நீ வந்ததும்  அடைந்தேன் !
பூமியில் சொர்க்கம் நீ தொட்டதும் அறிந்தேன் !
வாழ்க்கையின் முக்தி நீ சிரித்ததும் அடைந்தேன் !
நரகத்தின் வாசம் நீ அழுகையில் கண்டேன் !
உன் முத்தத்தின் மிச்சம் நிரந்தரம் என்னில் !
உன் நேசத்தின் வாசம் முகிழ்த்ததும் என்னில் !
உன் தழுவலின்  சுகம் விழுந்ததும்  என்னில் !
என் நட்பாய் , என் பகையாய் ,
என் சொர்கமாய்  ,என் நரகமாய்,
என் சேயாய்,என் தாயாய் ,
என் சிரிப்பாய் ,என் அழுகையாய் ,
என் தேவதையாய் ,என் ராட்சசியாய் ,
என் எல்லாம் எல்லாமாய்  இருப்பவளே .. ...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ....



Friday, September 2, 2011

நட்பு


சாலையில் நடந்து போகும் பெண்ணின் பின்னல் ,

வானொலியில் கேட்கும் ஏதோ ஒரு பாடல் ,

கடந்து போகும் சைக்கிள் மணி ஓசை ,

 பயணத்தில் கடக்கும் வீடு ,


 நினைவு அடுக்கில் மறைந்து கிடைக்கும்

தொலைந்து போன தோழியின் நினைவுகளை தட்டி எழுப்புகிறது

நட்பு தொலைந்து போகலாம்


ஆனால் ,
 
 நட்பின் அடையாளங்கள் என்றும் தொலைவதில்லை !!