Monday, March 29, 2010

என்னுயிர் தோழிகளுக்கு சமர்ப்பணம் !

இந்த பூமியில் பிறந்த போது அம்மாவின் கருப்பை பாதுகாப்பு முடிந்து போனதை நினைத்து பயம் !
மழலையாக இருந்த போது தாயின் பூச்சாண்டி கதைகளை
நினைத்து  பயம் !
பள்ளி பருவத்திலோ ஆசிரியை , மதிப்பெண்கள் ,  புத்தக சுமையை
நினைத்து பயம் !
கல்லூரி பருவத்தில் தோழிகள் பட்டாம்பூச்சியை திரைப்படம்,கேளிக்கை என இறக்கை விரித்து பறக்க ,
உனக்கு உன் தந்தை என்ன சொல்வரோ என்று
 நினைத்து பயம்!
நாளொரு பேஷன் , பொழுதொரு வண்ணமாய் கல்லூரி வண்ண மயமாய் இருக்க ,
சிறிய  பொட்டு வைக்க கூட தடை சொல்லும் தாயின் கண்டிப்பை
 நினைத்து பயம் !
அம்மாவை காண மனது துடித்தும் போகாதே என்று சொல்லும் கணவனை மீறி
போக முடியாத பயம் !
தோழியை தொலை பேசியில் அழைக்க நினைத்தாலும் கணவனின் பாராமுகம்
நினைத்து பயம் !
பல மாதங்கள் கழித்து உனக்கே உனக்காய் சில தருணங்களில் வெளியே செல்ல எல்லாவரிடமும் அனுமதி கேட்க பயம் !
நீ பிறந்ததில் இருந்து இன்று வரை
நீ மற்றவர்களுக்கு பயந்து பயந்து வாழ்கையின் பாதி தூரம் கடந்து விட்டாய் !
உன் வாழ்கையை இன்றும் மற்றவர்கள் தான் வாழ்கிறார்கள் !
எப்பொழுது  நீ உன் வாழ்கையை வாழ போகிறாய் ?????

Thursday, March 18, 2010

குளோபல் வார்மிங் ! வெப்ப மயமாதல் !

பாட்டு , பரத நாட்டியம் , கீ போர்டு , போநேடிக்ஸ் ....
அடுத்த வீட்டு குழந்தையின் மதிப்பெண்கள் ...
பள்ளிகூடத்தில் பரிக்ஷை ...
ஸ்போர்ட்ஸ் டே ஆயத்தங்கள் ..
இப்படி பல கவலை அம்மாக்களுக்கு ...
அம்மா வாங்கி குடுத்த மயில் இறகு எப்போ குட்டி போடும் ?
இன்னிக்கு விளையாட மைதிலி வருவாளா ?
காலம்பற கார் கிட்ட இருந்த பூனை குட்டி இப்போ இருக்குமா ?
இப்படி கவிதை கவலைகள் மழலைக்கு ....
பட்டாம்பூச்சிக்கு வர்ணம் பூச வேண்டாம் - குறைந்த பக்க்ஷம் சிறகு முறிக்க வேண்டாமே?
கிளிகளுக்கு பறக்க சொல்லி குடுக்க வேண்டாம் - குறைந்த பக்க்ஷம் கூண்டில் அடைக்க வேண்டாமே ??
குழந்தைகள் உலகத்தில் பரவும் வெப்ப மயமாதல்எப்போது குறையும் ??

Thursday, March 4, 2010

பெண் சுதந்திரம் ??

பெண் விடுதலை கிடைத்துவிட்டதாம்
நம்ப சொல்கிறார்கள் !
இப்போதும் பெண் குழந்தை பிறக்கும்போது அழுகின்ற ஓசை கேட்டு கொண்டுதான் இருக்கிறது !
இப்போதும் பெண் குழந்தைக்கு தங்கம் சேர்க்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !
இப்போதும் பெண் அப்பா, அண்ணன்,தம்பி,கணவன்,மகன் என்ற உறவுகளுக்கு கட்டுபடத்தான் வேண்டி இருக்கிறது !
இப்போதும் சில இடங்களில் மருமகள் அக்னிப்ரவேசம் செய்யத்தான் வேண்டி இருக்கிறது !
இப்போதும் ருசிக்கா போன்ற பெண்களுக்கு நீதி கிடைக்க போராடத்தான் வேண்டி இருக்கிறது !
இப்போதும் பெண்கள் பல இடர்கள் , கேலி பேச்சுக்கள் எல்லாவற்றையும் தாண்டி தான் முன்னேற வேண்டி இருக்கிறது !
இப்போதும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கும் பெண்ணை காட்டும் கேலி கூத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது !
ஹே பாரதி !
பெண்மையை போற்றினாய் ! பெண் சுதந்திரம் வேண்டும் என்று வேண்டினாய் !
பெண்ணுக்காய் கனவு கண்டாய் !
என்று நனவாகும் உன் கனவு ?