Sunday, February 28, 2010

காலம்

மழையின் சாரல்
மழலையின் சிரிப்பு
மலரின் வாசம்
இவைகளை தேடி சந்தோஷித்தது பட்டாம்பூச்சி காலம் ....
சனியன் புடிச்ச மழை நேரம் காலமே தெரியாது - வாகனங்களின் அணிவகுப்பில் அலுவலக அவசரத்தில் நான் ...
விளையாட வாம்மா - என் மழலையின் கொஞ்சலான அழைப்பு
அலுவலக தொலை பேசி அழைப்பின் அவசரத்தில் நான்....
வீடு முழுவதும் பூத்திருக்கும் ரோஜாவின் வாசம்
வீடெல்லாம் ஒரே பூச்சி இந்த செடிய கொஞ்சம் வெட்டணும் ..
வீட்டை கவனிக்கவே நேரம் இல்லாத நான் .....
காலத்தின் மாற்றத்தில் நான் தொலைத்தது என் ஆசைகளையா ?
இல்லை என்னுள் இருந்த மனித உணர்வுகளையா
பதில் தேட சமயம் இல்லாத அவசரத்தில் நான்... !!!

Thursday, February 25, 2010

எது சுதந்திரம் ?

என்று கிடைத்தது நமக்கு சுதந்திரம் ?
வெள்ளையர்கள் வெளியேறிய தினமா ?
கருத்து சுதந்திரம் கிடைத்த தினமா ??
எழுத்து சுதந்திரம் கிடைத்த தினமா ??
தொழில் சுதந்திரம் கிடைத்த தினமா ??
பெண் சுதந்திரம் கிடைத்த தினமா ??
என்று கிடைக்குமோ சாதி சுதந்தரம் அன்றே சுதந்திர தினம் !

Wednesday, February 24, 2010

ஞானி !

முற்றும் துறந்தவன் ஞானி என்று சொன்னார்கள்
ஞானி என்பவன் யார் என்று கேட்டேன்
மெய் உணர்ந்தவன் ஞானி என்றார்கள்
சொந்தங்கள் துறந்தவன் ஞானி என்றார்கள்
தேவைகள் குறைந்தவன் ஞானி என்றார்கள்
காண கிடைக்காத பிறவியவன் என்றார்கள்
அப்படி ஒருவனை சாலையில் கண்டபோதோ.....
பைத்தியக்காரன் என்றார்கள் !!!!!

வாழ்க்கை

வாழ்க்கை எனும் சிலந்தி வலையில் விட்டில் பூச்சியாக நான் !
வாழ்கையின் மையத்தை அடைந்து விட்ட இருமாப்பு எனக்கு !
நான் வாழ்க்கையை வெற்றி கொள்ள போகிறேனோ வாழ்க்கை என்னை வெற்றி கொள்ள போகிறதோ ?
என்னை விழுங்க காத்திருக்கும் விதி எனும் சிலந்திக்கே வெளிச்சம் !!!