Monday, March 29, 2010

என்னுயிர் தோழிகளுக்கு சமர்ப்பணம் !

இந்த பூமியில் பிறந்த போது அம்மாவின் கருப்பை பாதுகாப்பு முடிந்து போனதை நினைத்து பயம் !
மழலையாக இருந்த போது தாயின் பூச்சாண்டி கதைகளை
நினைத்து  பயம் !
பள்ளி பருவத்திலோ ஆசிரியை , மதிப்பெண்கள் ,  புத்தக சுமையை
நினைத்து பயம் !
கல்லூரி பருவத்தில் தோழிகள் பட்டாம்பூச்சியை திரைப்படம்,கேளிக்கை என இறக்கை விரித்து பறக்க ,
உனக்கு உன் தந்தை என்ன சொல்வரோ என்று
 நினைத்து பயம்!
நாளொரு பேஷன் , பொழுதொரு வண்ணமாய் கல்லூரி வண்ண மயமாய் இருக்க ,
சிறிய  பொட்டு வைக்க கூட தடை சொல்லும் தாயின் கண்டிப்பை
 நினைத்து பயம் !
அம்மாவை காண மனது துடித்தும் போகாதே என்று சொல்லும் கணவனை மீறி
போக முடியாத பயம் !
தோழியை தொலை பேசியில் அழைக்க நினைத்தாலும் கணவனின் பாராமுகம்
நினைத்து பயம் !
பல மாதங்கள் கழித்து உனக்கே உனக்காய் சில தருணங்களில் வெளியே செல்ல எல்லாவரிடமும் அனுமதி கேட்க பயம் !
நீ பிறந்ததில் இருந்து இன்று வரை
நீ மற்றவர்களுக்கு பயந்து பயந்து வாழ்கையின் பாதி தூரம் கடந்து விட்டாய் !
உன் வாழ்கையை இன்றும் மற்றவர்கள் தான் வாழ்கிறார்கள் !
எப்பொழுது  நீ உன் வாழ்கையை வாழ போகிறாய் ?????

No comments:

Post a Comment